தீயிட்டு எரிக்கும் விவசாயிகள் - ராஜபக்சவினரின் குரக்கன் சால்வையும் பசளை நாடகமும்! இழந்து விடுவாரா கோட்டாபய?

srilanka politics mahinda rajapaksa basil rajapaksa gotabaya rajapaksa
By Steephen Oct 27, 2021 04:01 AM GMT
Report

மகிந்த ராஜபக்ச பரம்பரையின் முதல் வேர் டி.எம். ராஜபக்ச. அவர் மகிந்தவின் தந்தை. டி.ஏ. ராஜபக்சவின் சகோதரர். அவர் 1936 ஆம் ஆண்டு அரச சட்டவாக்க சபைக்கு ஹம்பாந்தோட்டை மாவடத்தில் போட்டியிட்டார். அந்த காலத்தில் நடந்த தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் பயன்படுத்தப்படவில்லை.

ஒரு நிறத்தின் கீழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். டி.எம். ராஜபக்ச தேர்தலில் போட்டியிடும் போது நிறம் ஒன்றை வழங்குமாறு கோரினார். லேனாட் டுல்ப்புடன் ஒரு பயணம் என்ற நூலில் இது பற்றி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி லுப்பியன் போலியர், விக்ரமசூரிய, ஜீ.கே.டப்ளியூ. பெரேரா போன்ற பிரபுக்கள் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இறுதியாக டி.எம். ராஜபக்ச தனது வேட்புமனுவை, அரசாங்க அதிபர் ஜீ.ஜே. நடேசனிடம் கையளித்தார். வேட்புமனுவை கையளிக்கும் போது எனது நிறம் என்ன என்று அவர் அரசாங்க அதிபரிடம் கேட்டார். ஆ... டி.எம். ராஜபக்ச உனது நிறமா.. என கேட்ட அரசாங்க அதிபர் நடேசன், தனது காலை தூக்கி மேசையில் வைத்து, இதுதான் உனது நிறம் எடுத்துக்கொள் எனக் கூறினார்.

இதனடிப்படையிலேயே டி.எம். ராஜபக்சவுக்கு குரக்கன் நிறம் கிடைத்தது. அரச அதிபரின் காலணி நிறம் கிடைத்த போதிலும் அதனையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அளவுக்கு டி.எம். ராஜபக்ச தூர நோக்கு கொண்டவராக இருந்தார். நான் பெற்றுக்கொண்டது வறிய சேனை விவசாயிகளின் நிறம். ருகுணுவின் குரக்கன் நிறம் என பெருமிதம் பேசி குரக்கன் சால்வையை தோளில் போட்டுக்கொண்டு டி.எம். ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டார். லேனாட் டுல்ப்புடன் ஒரு பயணம் (104 பக்கம்) இந்த நூலுக்கு அமைய குரக்கன் சால்வையின் வரலாறு இதுதான்.

டி.எம். ராஜபக்சவின் நிறம் எமது விவசாயிகளின் குரக்கன் நிறம், குரக்கன் நிறம் வாழ்க.. என டி.எம். வாக்கு கேட்டு கிராமங்களை சுற்றி வந்த போது விவசாயிகள் இந்த கோஷத்தை எழுப்பியதாக நூலில் கூறப்பட்டுள்ளது.

டி.எம்மின் மரணத்தின் பின்னர் நாடாளுமன்றத்திற்கு வந்த மகிந்த ராஜபக்சவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்ட போது அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் இருந்தன. டி.ஏ. ராஜபக்ச யானைச் சின்னத்தில் போட்டியிட்டார் நிறம் பச்சை. எனினும் தனது சகோதரர் ஹம்பாந்தோட்டைக்கு அறிமுகப்படுத்திய குரக்கன் சால்வை அணிந்தே அவர் தேர்தலில் போட்டியிட்டார். இதன் பின்னர் அரசியலுக்கு வந்த டி.எம். ராஜபக்சவின் புதல்வர்களான ஜோர்ஜ் ராஜபக்ச, லக்ஷ்மன் ராஜபக்ச ஆகியோர் குரக்கன் சால்வையை அணிந்தே தேர்தலில் போட்டியிட்டனர்.

1970 ஆம் ஆண்டு டி.ஏ. ராஜபக்ச மரணமடைந்த பின்னர் அரசியலுக்கு வந்த மகிந்த ராஜபக்சவும் குரக்கன் சால்வையை அணிந்தார். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பசில் ராஜபக்சவும் குரக்கன் சால்வையை அணிந்தே போட்டியிட்டார். 1977 ஆம் ஆண்டு மகிந்தவை போன்று பசிலும் தேர்தலில் தோல்வியடைந்தார். இதன் பின்னர் முல்கிரிகல இடைத்தேர்தலில் போட்டியிட்ட சமல் ராஜபக்சவும் குரக்கன் சால்வையை அணிந்தார்.

2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கும் வரை இந்த குரக்கன் சால்வை ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் பிரபலமாக இருந்தது. மகிந்த பிரதமர் பதவிக்கு தெரிவான பின்னர் குரக்கன் சால்வையை அணியும் போது இது என்ன சால்வை என அனைவரும் கேட்க ஆரம்பித்தனர்.

“ மகிந்தவின் தோளில் இருப்பது விவசாயிகளின் நிறம், அதுதான் ராஜபக்சவினரின் சின்னம் மற்றும் அடையாளம்” என அன்றைய மகிந்த ஆதரவாளர்கள் குரக்கன் சால்வையை இப்படியே பிரசாரம் செய்தனர். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த தனது தோளில் இருப்பது விவசாயிகளின் அடையாளம் எனக் கூறினார். இந்த குரக்கன் சால்வையின் மீது ஈர்ப்பு கொண்டே, வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களில் பரவியிருக்கும் விவசாயிகள் மகிந்த வெற்றிப் பெற வாக்களித்தனர்.

விவசாயிகளுக்கு பசளையை வழங்குவது மற்றும் ரணில் அரசாங்கம் இரத்துச் செய்த நெல் விற்பனை சபையை மீண்டும் ஏற்படுத்துவது ஆகிய இரண்டு விடயங்களே அன்று மகிந்தவின் தேர்தல் கோஷமாக இருந்தது. மகிந்த விவசாயிகளை கவரும் வகையில் அப்படி பேசினார்....

கமத்தொழிலை முன்னேற்றி நாட்டை பரக்கிரமபாகு யுகத்தை நோக்கி கொண்டு செல்லப் போவதாக கூறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் அன்று வயல்களை நிரப்புமாறு கூறினார். விவசாயிகளின் பசளை மானியத்தை இரத்துச் செய்தார். விவசாயத்தை அழித்தார். தேசிய மற்றும் சிறிய விவசாயிகளின் கமத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. நெல் விற்பனை சபையை கடந்த அரசாங்கம் இரும்புக்கு விற்பனை செய்தது. இதனால், விவசாயிகளுக்கு தமது உற்பத்தியை விற்பனை செய்ய இடமில்லை. விவசாயிகளின் நெல்லை விற்பனை செய்ய புதிய நிறுவனம் ஏற்படுத்தப்படும்” என பேசினார்.

மகிந்த ராஜபக்ச 15-01 -2005 விவசாயிகள் மகிந்தவின் குரக்கன் சால்வை மீது நம்பிக்கை வைத்தனர். மகிந்த ஜனாதிபதியாக தெரிவானார். மகிந்த ஜனாதிபதியாக தெரிவான பின்னர், பசில் ராஜபக்ச தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான போது மகிந்தவே பசிலுக்கு குரக்கன் சால்வையை அணிவித்தார். 2010 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு தெரிவான போது மகிந்த அவருக்கும் மகிந்தவே குரக்கன் சால்வையை அணிவித்தார்.

எனினும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ச தேசிய உடையை அணியவில்லை. குரக்கன் சால்வையையும் அணியவில்லை. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று பதவிப் பிரமாணம் செய்யும் போது குரக்கன் சால்வையை அணியுமாறு மகிந்த மற்றுத் ராஜபக்ச குடும்பத்தினர் கோட்டாபயவிடம் கூறினாலும் அவர் அதனை அணிய மறுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிக்கும் நாளில் குரக்கன் சால்வையை அணியுமாறு மகிந்த ஆலோசனை வழங்கிய போதும் கோட்டாபய அதனை நிராகரித்தார் என செய்திகள் வெளியாகின. எனினும் கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வந்து தனது ராஜாசன உரையை நிகழ்த்தும் போது, குரக்கன் சால்வை பற்றி இவ்வாறு கூறினார்,

அன்று ருகுணவின் சிங்கமாக அடையாளப்படுத்தப்பட்டவர் டி.ஏ. ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வந்த முதல் நாளில் இருந்து குரக்கன் நிறமான சால்வையை அணிந்தார். கிருவாபத்துவில் உள்ள விவசாயிகளையே அவர் அந்த சால்வை மூலம் அடையாளப்படுத்தினார். நான் அந்த அடையாளத்தை அணியாவிட்டாலும் எப்போதும், நாட்டின் வறிய மக்களுக்கான குரல் கொடுக்கும் குரக்கன் சால்வையின் ஆழமான அடையாளத்தை நான் பிரதிநிதித்துவம் செய்கிறேன் எனக் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச 03-01-2020 கோட்டாபய அன்று குரக்கன் சால்வையை அணியாது தனது உரையை நிகழ்த்தும் போது மகிந்தவும் ராஜபக்ச குடும்பத்தினரும் பதற்றமடைந்ததை அணிந்து குரக்கன் சால்வை பற்றி பேசி இருக்கலாம். எனினும் தற்போது விஷமற்ற பசளை கொள்கையை கையாள முயற்சித்து, விவசாயிகள் குரக்கன் சால்வையை தீயிட்டு எரிக்கும் போது, மகிந்தவும் ராஜபக்ச குடும்பத்தினரும் பசளை கொள்கையை நியாயப்படுத்த முயற்சித்து, விவசாயிகளின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

மகிந்த குரக்கன் சால்வையின் மூலம் 2005 ஆம் ஆண்டு விவசாய நிலைத்தை கைப்பற்றும் முன்னர், அந்த விவசாய நிலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தாயகமாக இருந்தது. டி.எஸ். சேனாநாயக்கவின் காலத்தில் இருந்தே விவசாய நிலம், ஐக்கிய தேசியக் கட்சியின் தாயமாக இருந்தது. 2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தை அமைத்த ரணில் விக்ரமசிங்க, விவசாயிகளுக்கு டெனிம் காற்சட்டையை அணிவித்து, விவசாயத்திற்கு புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, விவசாயிகளை முதலாளிகளாக மாற்ற முயன்ற போது, சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பியும் சுற்றிவளைத்து சேறுபூசும் பிரசாரத்தை முன்னெடுத்தன.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், விவசாயிகளை நவீனமயப்படுத்த முயற்சித்ததால், ஐக்கிய தேசியக் கட்சி தனது தாயகமான விவசாய நிலத்தை இழந்தது. இந்த நிலையில், விவசாயிகள் மற்றும் விவசாய கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி, ராஜபக்சவினர் கைப்பற்றிய, விவசாய நிலத்தை, கோட்டாபய தனது நேனோ தொழிற்நுட்பம் மற்றும் விஷமற்ற பசளை மூலம் விவசாயிகளை நவீனமயமாக்க முயன்று இழந்து விடுவாரோ என்பதை சொல்ல தெரியவில்லை.

கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ

மொழியாக்கம் - ஸ்டீபன்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US