லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்த முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக லிட்ரோகாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் பதிவான தகவல்களின் அடிப்படையில், இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலைகள் தொடர்ச்சியாக பல மாதங்களாக மாறாமல் உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை முதல் ஒக்டோபர் 2025 வரை எந்த விலை திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
விலை திருத்தம்
மேலும், அண்மைய விலை திருத்தம் (அதிகரிப்பு) ஜூலை 2025க்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையில், லாஃப் எரிவாயு நிறுவனம், நேற்று (01) முதல் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக அறிவித்தது.
அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 150 அதிகரித்து, அதன் புதிய விலை ரூ. 4250 ஆகும்.
5 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 65 அதிகரித்து, அதன் புதிய விலை ரூ. 1710 என்று லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri