மிக நீண்ட காலத்திற்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றின் முக்கியத் தீர்ப்பு
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு கோட்டாபய, மகிந்த மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலத்திற்கு பின்னரே உயர்நீதிமன்றம் இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நீதிமன்றத்தின் அறிவிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆட்சியாளர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் நீதிமன்ற சுயாதீனத்தை சர்வதேசத்துக்கு உறுதிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடையவேண்டும்.
ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதில்லை என்ற கருத்து நாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது உயர் நீதிமன்றம் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
நீண்ட காலத்துக்கு பின்னரே உயர் நீதிமன்றம் இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இது தொடர்பில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
ஏனெனில் எமது நீதிமன்ற சுயாதீனம் தொடர்பில் சர்வதேசத்துக்கு நல்லெண்ணம் இருக்கவில்லை. ஆனால் இந்த தீர்ப்பின் மூலம் எமது நீதிமன்ற சுயாதீன தன்மை தாெடர்பில் சர்வதேசத்துக்கு தெரிவிக்க இது சிறந்த ஆரம்பமாகும்.
ஆட்சியாளர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்காத ஒரு காலம் இருந்தது. திவிநெகும சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக, அவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவந்து பதவி நீக்கினார்கள் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |