புத்தாண்டினை அடுத்து ராஜபக்ச குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி! அநுர அரசின் அதிரடி நடவடிக்கை
நாடு பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாக தோற்றப்பாடுகள் எழுந்து வரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்திலுள்ள முக்கிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சமகால அநுர அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதற்காக பாதுகாப்புப் படைகளையும் சட்ட அமலாக்க பிரிவுகளையும் அரசாங்கம் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளில், சில பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவுகள் வழங்கப்படுவது குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
எழுத்துப்பூர்வ உத்தரவு
மேலும், அவற்றை எழுத்துப்பூர்வமாகக் கோரும் ஒரு போக்கு நிலவுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, சுயாதீன ஆணைக்குழுக்களுடன் பணியாற்றும் அதிகாரிகள் இதுபோன்ற எழுத்துப்பூர்வ உத்தரவுகளைக் கோருவதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் அரசியல் முடிவுகளின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பத்தின் பல உறுப்பினர்களைக் கைது செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கைது செய்ய நடவடிக்கை
அதற்கமைய, தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் சிராந்தி ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரில் ஒருவரையோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களையோ சிறையில் அடைக்க முயற்சி நடப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் சமல் ராஜபக்சவைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்ததால் அது தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சிரிலிய சவியா திட்டம் தொடர்பாக சிராந்தி ராஜபக்சவை எதிர்காலத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கலாச்சார நிதியிலிருந்து நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் அரசாங்க அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவுறுத்தல்
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri