'ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டியடிப்பார்கள்': ஸ்ரீநேசன்
"இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "இலங்கையை ஆண்ட - ஆளுகின்ற தலைவர்கள் நாட்டைச் சீர்குலைத்துள்ளார்கள். நாட்டை அவர்கள் சீர்படுத்தவில்லை.
மக்கள் போராடுவார்கள்
அவர்கள் இன்னும் நாட்டைச் சீர்குலைப்பார்களானால் மக்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவார்கள்; போராடுவார்கள்; நெருக்குவாரங்களைக் கொடுப்பார்கள்.
ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள்.
இதைத் தற்போதைய தலைவர்கள் உணர்ந்து சுயநலத்தைக் களைந்து பொதுநலத்தின்
அடிப்படையில் செயற்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam