இங்கிலாந்தில் மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தொடருந்து ஊழியர்கள் - உலக செய்திகள்(Video)
இங்கிலாந்து தொடருந்து ஊழியர்கள் புதிய வேலை நிறுத்தங்களை நடத்த தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான நீண்டகால மோதலால் அதிருப்தியில் உள்ள தொடருந்து ஊழியர்கள், புதிய வேலை நிறுத்தங்களை நடத்துவார்கள் என ஆர்.எம்.டி. தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது, நெட்வொர்க் தொடருந்து மற்றும் 14 தொடருந்து நிறுவனங்களில் பணிபுரியும் அதன் உறுப்பினர்கள் 40,000 பேர் செப்டம்பர் 15 மற்றும் 17ஆம் திகதிகளில் வெளிநடப்பு செய்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வேலை நிறுத்தங்களின் முதல் நாளில், 12 தொடருந்து நிறுவனங்களில் உள்ள தொடருந்து ஓட்டுநர்கள் வெளிநடப்பு செய்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் உறுப்பினர்களில் 9,000 பேரின் இந்த நடவடிக்கையே இதுவரை சாரதிகள் பங்கு பற்றிய மிகப்பெரிய வேலைநிறுத்தமாக இருக்கும் என்று அஸ்லெஃப் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
