மழை காரணமாக பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு பாதிப்பு: போட்டி ரத்து, புள்ளிகள் பகிர்வு

Pakistan New Zealand
By Kamal Feb 21, 2026 04:53 PM GMT
Report

 கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற இருந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முக்கியப் போட்டி, தொடர்ச்சியான மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

அதிகாரப்பூர்வ தொடக்க நேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என காத்திருந்த போட்டி அதிகாரிகள், இறுதியில் ஆட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.

நாணய சுழற்சி நடைபெற்ற சமயத்தில் தொடங்கிய மிதமான மழை பின்னர் அதிகரித்ததுடன், நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மழை காரணமாக பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு பாதிப்பு: போட்டி ரத்து, புள்ளிகள் பகிர்வு | Rain Washes Out Opening Super Eight Pak Vs Nz

மைதானம் போட்டி நடாத்துவதற்கு உகந்ததாக இல்லாததால், நடுவர்கள் தவிர்க்க முடியாத முடிவை எடுத்தனர். நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கு முன்னதாகவே மழை பெய்யும் சாத்தியம் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முந்தைய தினமும் மழை காரணமாக பாகிஸ்தான் அணியின் மாலை பயிற்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.

சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் தலா ஓரு புள்ளிகள் என்ற அடிப்படையில் பெற்றுள்ளன.

பாகிஸ்தான் அணி அடுத்ததாக செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு இலங்கையுடன் மோத உள்ளது.

நியூசிலாந்து அணி புதன்கிழமை இலங்கையையும், வெள்ளிக்கிழமை இங்கிலாந்தையும் எதிர்கொள்ள உள்ளது.

இந்தக் குழுவில் உள்ள அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இன்றைய போட்டியில் தலா ஓரு புள்ளி மட்டுமே கிடைக்கப் பெற்றது.

இது அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் சவால்களை ஏற்படுத்தலாம் என கிரிக்கட் வல்லுனர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US