மழை வீழ்ச்சி இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலை
நாட்டில் மழை வீழ்ச்சி இல்லாவிட்டால் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 300 முதல் 400 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யாவிட்டால் நீர் நிலைகளின் நீரை முகாமைத்துவம் செய்வதில் சிக்கல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்விநியோகப் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்பொழுது அநேகமான நீர் நிலைகளின் நீர்மட்டம் 50 வீதமாக காணப்படுகின்றது.
விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்
இந்த நீர், மின்சார உற்பத்தியை விடவும் விவசாய நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நீர் மின் உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.