நாளை பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை (செப்டம்பர் 02) நாட்டின் காலை வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யக்கூடும்.
அத்துடன் பிற்பகல் 2:00 மணிக்கு பின் ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை பெய்யக்கூடும்
இதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள்இ வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

இந்த நிலையில் சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, நாளை நண்பகல் 12:10 மணிக்கு ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை மனம்பிட்டி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.