இலஞ்சம் பெற முயன்ற தொடருந்து பயணச்சீட்டு பரிசோதகர் கைது
பயணச்சீட்டு இன்றிப் தொடருந்தில் பயணித்த பயணியொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயன்ற தொடருந்து பயணச் சீட்டு பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 28ஆம் திகதி களனி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கொம்பனித் தெரு தொடருந்து நிலையத்தில் வைத்து செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி தொடருந்தில் பயணித்த குற்றத்துக்காக தொடருந்து பயணச்சீட்டு பரிசோதர்களினால் நிறுத்தப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால்...
பயணச்சீட்டு இன்றி தொடருந்தில் பயணித்த குற்றத்துக்கான அபராதத் தொகையை செலுத்த அன்றைய தினம் அவரிடம் போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அவரது தேசிய அடையாள அட்டையை பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டையை மீண்டும் பெற்றுக் கொள்வதாயின் தனக்கு மூவாயிரம் ரூபா இலஞ்சம் வழங்குமாறு அவர் குறித்த பயணியிடம் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட பேரத்தின் பின்னர் இலஞ்சத் தொகையை ஆயிரத்து ஐநூறு ரூபாவாக குறைத்துக் கொள்ள தொடருந்து பயணச்சீட்டு பரிசோதகர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சம்பவத்துடன் தொடர்புடைய பயணி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்குத் தகவல் அளித்துள்ளார்.
அதனையடுத்து பயணியிடம் இருந்து புகையிரத பயணச்சீட்டு பரிசோதகர் இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயன்ற போது அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
