தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இரண்டாம் இணைப்பு
இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த தொடருந்து திணைக்கள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தொடருந்து ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன லால் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தொழிற்சங்க நடவடிக்கை
இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதன்படி, தொடருந்து சாரதிகள் சங்கம், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் தொடருந்து மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan