புகையிரத திணைக்கள துறை பணிப்புறக்கணிப்பு இரத்து
புகையிரத திணைக்கள பொது முகாமையாளர், மேற்கொண்ட தீர்மானங்களை அடுத்து திட்டமிடப்பட்டிருந்த புகையிரத திணைக்கள துறை பணிப்புறக்கணிப்பை இரத்து செய்ய இலங்கை புகையிரத திணைக்கள நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தீர்மானித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ள தீர்மானம்
முன்னதாக இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க புகையிரத திணைக்கள தொழிற்சங்கம் தீர்மானித்தது.
தமது பணிகளுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தை முன்வைத்து, தொழிற்சங்கம், இந்த தீர்மானத்தை மேற்கொண்டது.

நிறுத்தப்பட்ட புகையிரத சேவைகள்
இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று மாத்திரம் சுமார் 180 புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதேவேளை எதிர்வரும் வாரம் முதல் எரிபொருட்களை நாட்டுக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

| மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு |