புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு(Photos)
புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டுள்ள 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று (13) மலையக புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அந்தவகையில் இன்று அதிகாலை நானுஓயாவிலிருந்து கண்டி செல்லவிருந்த புகையிரதம் நானுஓயா புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
புகையிரத நிலைய அதிபர்கள், உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாமை, சாதாரண அட்டவணையை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்து அதன் பின்னர் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்படுகின்றமையால் புகையிரத பயணிகளும் புகையிரத நிலைய அதிபர்களும் பாதிக்கப்படுகின்றமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அரச ஊழியர்கள் எனப் பலர் பாதிப்புக்குள்ளாக்கினர். பாடசாலை மாணவர்கள் புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தினை அறியாது புகையிரத நிலையங்களுக்கு வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதே நேரம் பயணிகள் சிலரும் தங்களது பயணத்தினை புகையிரத ஊடாக தொடர முடியாது பேருந்து தரிப்பிடங்களை நோக்கிச் செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.
நாளை முதல் தொடர் விடுமுறையொன்று காணப்படுவதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்
சிவனொளிபாதமலையினை தரிசனம் செய்வதற்காக வருகை தரவிருந்த போதிலும் இவர்கள்
மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக இன்று புகையிரத நிலையத்தில் வழமைக்கு மாறாக
விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
