கொழும்பு - தெஹிவளையில் இளைஞர்கள் இருவர் கைது
கொழும்பு - தெஹிவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்ட புகையிரத காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாதுவையில் இருந்து ராகம செல்லும் புகையிரதத்தில் சந்தேகநபர்கள் இருவரும் முகக்கவசம் அணியாமல் ஏற முயன்றுள்ளனர்.
இதன்போது முகக்கவசம் அணிந்து புகையிரதத்தில் ஏறுமாறு அறிவுறுத்திய சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் புகையிரத காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதன்போது காயமடைந்த குறித்த காவலர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, தெஹிவளையில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யபட்டுள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
