தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பான அறிவிப்பு
தொடருந்து நிலைய அதிபர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தொடருந்து நிலைய அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான பிரச்சினையை போக்குவரத்து மற்றும் ரயில்வே அதிகாரிகள் தீர்க்காவிட்டால், இந்த மாதம் 23 ஆம் திகதிக்கு பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று தொடருந்து நிலைய அதிபர்களுக்கான சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
செயற்படுத்தப்படாத பரிந்துரைகள்
புதிய ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால திருத்தங்களுக்கான பரிந்துரைகளை பொது சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் செயலாளர் 4 மாதங்களுக்கு முன்பு அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தாலும், அவை செயல்படுத்தப்படாததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிற அதிகாரிகளுக்கு இந்த மாதம் 9 ஆம் திகதி அறிவித்த போதிலும், தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டதாக சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam