தொடருந்து பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
இன்று (12) முதல் 42 தொடருந்து பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக தொடருந்துகளை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் இன்று முதல் மறு அறிவித்தல் வரை 42 தொடருந்து பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்திருந்தது.
புதிய அறிவித்தல்
இதன்படி, பிரதான பாதையில் 20 தொடருந்து பயணங்களும், புத்தளம் பாதையில் 04 பயணங்களும், களனிவெளி பாதையில் 02 தொடருந்து பயணங்களும், கடலோர தொடருந்து பாதையில் 16 தொடருந்து பயணங்களும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவித்திருந்தது.
எனினும் இந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் புதிய அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 39 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
