தொடருந்து பாதைகளை அவசரமாக மீளமைத்தால் விபரீதங்கள் ஏற்படலாம் : வெளியான தகவல்
'டித்வா' சூறாவளியால் சேதமடைந்த கொழும்பு - கண்டி தொடருந்து பாதையில் ரம்புக்கனை முதல் கண்டி வரையிலான தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க சுமார் ஒரு வருடம் ஆகும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
முழுமையான தொடருந்து பாதைகளுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 340 பில்லியன் ரூபாய் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பாதைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள்
பேராதனை கறுப்புப் பாலம் பாரிய சேதமடையவில்லை என்றாலும், பாலத்தின் அடித்தளம் மற்றும் ரம்புக்கனை - கண்டி தொடருந்து பாதையில் பல இடங்களில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளன.

பொறியியலாளர்களின் முறையான மதிப்பீட்டையடுத்தே மீளமையக்க முடியும். அவசரமாக தொடருந்து பாதையை அமைத்து தொடருந்துகளை இயக்குவது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
எனவே அவ்வாறான சூழ்நிலை ஏற்படாதவாறு நேரத்தை நிர்வகித்து பாதையை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதுவரை தொடருந்து பாதைகளுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 340 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.இது இறுதி மதிப்பீடு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மலையக தொடருந்து பாதையில் பல இடங்களில் பாரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் கொட்டகலையிலிருந்து அம்பேவல வரையிலான தொடருந்து பாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினம் என்று தொடருந்து பராமரிப்பு பிரிவின் பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.