திருகோணமலையில் விடுதியொன்று சுற்றிவளைப்பு: 4 பேர் கைது
திருகோணமலை- உவர்மலை பகுதியில் உள்ள விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதியொன்றில் சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளால் நேற்று (22.9.2026) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதி பொறுப்பாளர் எனக் கூறப்படும் 54 வயதுடைய ஆண் ஒருவரும், 48, 43 மற்றும் 38 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.