கோவிட்டிற்கு இலக்காகி இரு வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற இளம் வைத்தியர் பலி
ராகமவில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த வைத்தியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த 34 வயதுடைய மொஹமட் ஜனன் என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைத்தியர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் இரு வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வெளியான கோவிட் பரிசோதனை முடிவுகளின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
