சிவப்புக் கோடுகளில் மறைக்கப்பட்ட ரஃபா அகதிகள் முகாம்: நோர்வே அதிகாரி கவலை
ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது இஸ்ரேலின் நட்பு நாடுகளால் "சிவப்புக் கோடுகளில்" மறைக்கப்பட்ட ஒன்று என நோர்வே அகதிகள் அமைப்பின் (NRC) தலைவரான ஜான் எகெலாண்ட் (Jan Egeland) சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியின் பாடசாலை, வைத்தியசாலை உள்ளிட்ட பொது இடங்களில் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் இஸ்ரேலின் திட்டத்தால் சிவப்புக்கோடிடப்பட்ட இடங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
At least 40 children, women and men are confirmed dead in Rafah after an Israeli airstrike last night on tents housing those forced to flee within Gaza.
— Jan Egeland (@NRC_Egeland) May 27, 2024
How many more red lines must be crossed?
Our appeal to EU leaders meeting now:#NoMoreRedLines pic.twitter.com/gkKjxev97Y
ரஃபா பகுதிக்கு உதவி
இந்நிலையில், ஐரோப்பிய தலைவர்களுக்கு ரஃபா பகுதிக்கு உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரிய பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் திட்டம் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |