நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள விசேட உத்தரவு
தேர்தல் ஆணையகம் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
paffrel அமைப்பு மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் அமைச்சரவை, ஜனாதிபதியின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உள்ளிட்ட 29 பேர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
மனுதாரர் குற்றச்சாட்டு
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் மூலம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி, அபிவிருத்திப் பணிகள் தொடர்பான பொது வளங்களை வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டாம் என அரச நிறுவனங்களுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி செயலாளருக்கு கடந்த மே மாதம் 7ஆம் திகதி கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த வேட்பாளர்கள் பலர் மாகாண சமூகக் குழுக்களில் அங்கம் வகிக்கின்றமையால், அவர்கள் பொது வளங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு இணங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளார்.
மேலும், தனது அடிப்படை உரிமை மீறல் என தீர்ப்பு வழங்குமாறும், பிரதிவாதிகளிடம் இருந்து 10 மில்லியன் ரூபா நட்டஈடு அறவிடுமாறும் நீதிமன்றில் மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்தவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
