பேரழிவின் விளிம்பில் ஐரோப்பா - விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
ரஷ்யா உலகம் முழுவதையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்துள்ளது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு பேவையில் புதன்கிழமை ஆற்றிய உரையின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் சுகந்திர தினமான புதன்கிழமை நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவின் பாதுகாப்பு பேரவையில் காணொளி வாயிலாக உரையாற்றினார்.
அந்த காணொளி உரையில், ரஷ்யா முழு உலகையும் கதிர்வீச்சு பேரழிவின் விளிம்பில் வைத்துள்ளது என எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் ஆயுத ஆத்திரமூட்டல்கள்
மேலும் ரஷ்ய இராணுவம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் பிரதேசத்தை போர் மண்டலமாக மாற்றியுள்ளது என்பது உண்மை என்று ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஆயுத ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் காரணமாக கண்டம் கதிர்வீச்சு மாசுபாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என அவர் தெரிவித்தார்.
முற்றிலும் வெளியேற வேண்டும்
அத்துடன் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் முக்கிய பணி ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தின் நிலைமையை விரைவில் நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அதே நேரத்தில் மாஸ்கோ நிபந்தனையின்றி அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்திவிட்டு நிலையத்திலிருந்து முற்றிலும் வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.