அரசாங்கம் மீது ராதாகிருஷ்ணன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
நாட்டில் முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் கூறியிருந்தாலும், தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா - நானுஓயாவில் நேற்று மாலை (23.10.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் செய்தவர்களை பிடிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அத்தோடு தற்பொழுது சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் முட்டை ஒன்று விற்பனை செய்யப்படுகிறது.
அத்தோடு ஜனாதிபதி கூறியிருந்தார். தன்னிடம் ஊழல் செய்த அரசியல்வாதிகளின் கோப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதனை தான் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
கோட்டாபய அரசாங்கம்
ஆனால் இன்று வரை அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அத்தோடு உங்களுக்குத் தெரியும் கோட்டாபய அரசாங்கம் ஒரே நாளில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது.
இதனால் நாட்டின் உற்பத்தி குறைந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அதன் ஒரு நடவடிக்கையாக தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |