402 மில்லியன் ரூபா செலவு - நிர்மாணிக்கப்படாத ரேடர் அமைப்பு
வளிமண்டலவியல் திணைக்களம் 2010ம் ஆண்டு முதல் கொக்கல ரேடார் அமைப்பை அமைப்பதற்காக 40 கோடி ரூபாவிற்கும் (402.8 மில்லியன் ரூபா) செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை ரேடார் அமைப்பு கட்டப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ரேடார் அமைப்பை நிர்மாணிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 91 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தோல்வியடைந்த திட்டம்
இப்பொருட்கள் இடம் மாறியது குறித்தும், தோல்வியடைந்த திட்டத்துக்கு காரணமான அதிகாரிகள் குறித்தும், அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்தும் முறையான தணிக்கை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரையின் பேரில் தற்போதுள்ள பொருட்கள் மற்றும் கோபுரத்துடன் கூடிய கட்டிடம் தற்காலிக பாவனைக்காக இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அதிகாரி கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டு தொடர்பில் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
