மீள்வருகைக்காக மகிந்த தரப்பு கையிலெடுத்துள்ள ஆயுதம்! இலங்கைக்குள் வெடிக்கும் சர்ச்சைகள் (Video)
மக்கள் மத்தியில் மீண்டும் பௌத்த இனவாதத்தை வேரூன்ற வைத்து நாட்டினுடைய அடிப்படை பிரச்சினைகளை மறக்கச் செய்து அதனூடாக பௌத்த பேரினவாத அரசியலை முன்னெடுப்பதற்கான காய்நகர்த்தல்களை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றதாக காலிமுகத்திடல் போராட்டகளத்தின் முன்னணி செயற்பாட்டாளரும், சமூக செயற்பாட்டாளருமான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவான சில கருத்துக்கள் மற்றும் அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உண்மையிலே ஒரு மத சார்பின்மையும், மதம் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என்கிற ஒரு நிலைப்பாட்டையும் இந்த அரசாங்கம் கொண்டிருக்குமாக இருந்தால் திட்டமிட்டு மதமொன்றை இழிவுப்படுத்தியர்கள் மேல் ஏன் சட்டம் பாயவில்லை?
மாறாக இன்று நடாஷா என்கின்ற எமது நண்பரான ஒரு நகைச்சுவையாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது பேச்சு சுதந்திரத்தின் மீது கைவைக்கும் செயற்பாடாகவே காணப்படுகிறது.
எனவே பௌத்த இனவாதத்தை பாதுகாப்பதற்காக ஒரு சட்டத்தை இவர்கள் எடுத்துக் கொண்டு வந்து ஐசிசிபிஆர் என்ற பெயரிலே பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் அரசியல் என்பதே இனவாதம் மற்றும் மதவாதம் என்பதிலேயே தங்கியுள்ளது.
மகிந்த ராஜபக்ச தரப்பு தமது மீள்வருகைக்காக இனவாதிகளை பாவித்துக் கொண்டிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



