மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனின் நினைவு தினம்
மறைந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்மந்தனின் நினைவு தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாண முன்னாள் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ,மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விடுதலைப்போராட்டம்
இரா.சம்மந்தனின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார்.
“எங்களுடைய விடுதலைப்போராட்டம் என்பது அஞ்சல் ஓட்டம் போன்றது. தந்தை செல்வா முதல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வரை எட்டு தசாப்தமாக தொடர்கிறது.
தேசிய விடுதலை
விமர்சனங்கள் உண்டு அவற்றை எல்லாம் தாண்டி தேசிய விடுதலையை கொண்டு சென்ற பங்கு சம்மந்தனுக்கு மிகப்பெரியது.
இறுதியாக சாள்ஸ் நிர்மலநாதனும் நானும் இறுதியாக சந்திக்கும் போது அவரின் அனுமதியுடன் குரல் பதிவு செய்தேன் என் மீதான நடவடிக்கை இறுகுகின்ற போது வெளியிடுவேன்’’ நினைவாற்றல் நிறைந்தவர் விடயங்களை கேட்டு பதிலளிக்க கூடியவர்” என குறிப்பிட்டுள்ளார்.











பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

அந்த பிரச்சனையால் 15 ஆண்டுகள் காத்திருந்து அவரை திருமணம் செய்தேன்... கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
