கொழும்பில் 3000 பேருக்கு அவசர பேரிடர் மையம்.. வெளியான அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவி வரக்கூடிய வானிலையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரழிவுகளைக் கருத்தில் கொண்டு இவ்வாறு ஆர். பிரேமதாச மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகிறது.
அதன்படி, தற்போது மூவாயிரம் பேர் கொண்ட குழுவிற்கு குறித்த மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகிறது.
வெள்ள அபாயம்
களனி ஆற்றுப் படுக்கையில் வரலாறு காணாத வகையில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் நாளைய தினம் (29.11.2025) தலைநகர் கொழும்பு முழுவதுமாக வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு களனி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தால் தலைநகர் கொழும்பின் கொழும்பு, கொலன்னாவ மற்றும் வத்தளை நகரசபைப் பிரிவுகள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம் அவசர பேரிடர் மையமாகத் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |