நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சாணக்கியன்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்
நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இரா.சாணக்கியன் எம்.பிக்கு வாழ்த்து தெரிவித்து, களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஆதரவாளர்களால் நேற்று(06.02.2026) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து பிரயாணிகளுக்கு இனிப்புக்கள் பரிமாறி, பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், போரதீவுப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.



டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam