ஹட்டனில் கடும் மழை: நீரில் மூழ்கிய வீடுகள்
ஹட்டன் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கால்வாய்கள் நிரம்பி சில வீடுகள் கழிவு நீரில் மூழ்கியுள்ளதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக ஹட்டன் எம்.ஆர். டவுன் பகுதியில் முறையாக பராமரிக்கப்படாத கால்வாய் அமைப்பு காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் கலந்து வெளியேறி, அந்தப் பகுதியில் உள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் டிக்கோயா நகரசபையின் அதிகாரிகளின் கவனயீனமே இதற்கு காரணம் எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.
நிரந்தரமான தீர்வு
மழைக்காலங்களில் ஒவ்வொரு முறையும் இத்தகைய நிலைமைகள் உருவாகுகின்றன என்றும், இது குறித்து பலமுறை அதிகாரிகளை அறிவித்த போதிலும் இதுவரை நிரந்தரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை ஒரு சில பகுதிகளில் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதனால் கழிவு செல்வதற்கு வழியின்றி இவ்வாறான நிலை ஏற்படுவதாகவும் சட்டவிரோத கட்டடங்கள் குறித்தும், முறையற்ற கட்டடங்கள் குறித்தும் ஹட்டன் டிக்கோயா நகரசபைஎவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இது குறித்து பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய கவனமெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri