நாமலுக்கு எதிரான சாட்சியங்கள் குறித்து சந்தேகம் வெளியிடும் மொட்டு கட்சி
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான சாட்சியங்கள் குறித்து கட்சி சந்தேகம் ளெியிட்டுள்ளது.
நாமலை கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் எதிராளிகளை அடக்குவதற்காகவே ஊழல் எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி வருவதாகச் சாகர காரியவசம் இதன்போது குற்றம் சாட்டியுள்ளார்.
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் போது முன்வைக்கப்படும் சாட்சியங்கள் மீது எவ்வித நம்பிக்கையும் வைக்க முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அபேகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எந்தவிதமான அரசியல் பழிவாங்கல்களிலும் ஈடுபடவில்லை என சட்டத்தின் பிரகாரம் நாமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam