இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள முடிவு
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
"பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரவலான விழிப்புணர்வு
நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு அமைய, தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் அவை தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய நிகழ்ச்சியின் இலக்காகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட 2 குழந்தைகளின் உடல்கள்: 43 வயது பெண் கைது News Lankasri
