முச்சக்கர வண்டி ஓட்டுநர் கொலை விவகாரம்.. சந்தேகநபர் கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரைக் கொலை செய்து அவரது வாகனத்தைத் திருடிய சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸாரால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், தில்லையடி, ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய நபரே குறித்த சந்தேக நபர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
புத்தளம், அடபனவில்லுவ பகுதியில் உள்ள கால்வாயில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று (22) அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து விசாரணை தொடங்கியது.
யாராக இருந்தாலும் சுடுங்கள்! அக்குரேகொட இரட்டைக்கொலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்
பொலிஸார் தகவல்
பெப்ரவரி 21ஆம் திகதி தனது முச்சக்கர வண்டியில் வாடகைக்கு எடுப்பதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறிய 75 வயதான அப்துல் லத்தீப் என்பவர் இறந்தார் என்பதை அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.

விசாரணைகளின்படி, அன்று இரவு 9.30 மணியளவில் சந்தேக நபர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளார், இருவரும் வாடகை வண்டியில் ஒன்றாகச் சென்றுள்ளனர்.
முச்சக்கர வண்டியைத் திருடுவதற்காக சந்தேக நபர் ஓட்டுநரின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் வெட்டி கொலை செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, ஓட்டுநரின் உடலைக் அங்கேயே விட்டுவிட்டு, வாகனத்துடன் சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam