குருநாகல் கோர விபத்து: முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு
குருநாகல் - நாரம்மலை பகுதியில் தனியார் பேருந்தும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
நேற்று(18.02.2026) இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாரியப்பொலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பேருந்து சாரதி விபத்து
நாரம்மலை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்தும், எதிரே வந்த முச்சக்கர வண்டியும் எதிர்பாராத விதமாக மோதியதில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாரம்மலை பொலிஸார், தனியார் பேருந்து சாரதியை கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam