"புடின் உலகை ஆள்வார்" கவனத்தை ஈர்த்துள்ள பாபா வங்காவின் கணிப்பு
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 33 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கீவ் நகரில் ரஷ்யப் படைகள் தனது வான் தாக்குதலை மீண்டும் கடுமையாக்கியுள்ளதுடன், அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னமே பாபா வங்கா விளாடிமிர் புடின் தொடர்பில் குறிப்பிட்டுள்ள கணிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாட்டவரான பாபா வங்கா 50 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இயற்கை பேரிடர் மற்றும் போர்கள் ஏற்படுவதற்கு முன்பு அவை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், விளாடிமிர் புடின் மற்றும் ரஷ்யா தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்த கணிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவும் விளாடிமிர் புடினும் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
அதில், அனைத்தும் கரையும், பனி போல, ஒன்று மட்டுமே தீண்டப்படாமல் இருக்கும் - விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்யாவை எவராலும் இனி தடுத்து நிறுத்த முடியாமல் போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்படும் அனைத்தும் அவரால் அப்புறப்படுத்தப்படும், கைப்பற்றப்படுவதை தக்கவைத்துக் கொள்வார், அதனால் உலகத்தையும் ஆள்வார் என பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் எனவும், அது விளாடிமிர் புடின் காலத்தில் மகிமை பெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டுமின்றி, மூன்றாம் உலகப் போர், அணு ஆயுதங்கலின் பயன்பாடு தொடர்பிலும் பாபா வங்கா குறிப்பிட்டுள்ளார்.
பாபா வங்கா வெளியிட்டுள்ள கணிப்புகளில் 68% அளவுக்கு நடந்துள்ளதாக நிபுணர்கள் கூறி வந்தாலும், அவரது ஆதரவாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
