புடின் சுத்தியலால் அடித்துக்கொல்லப்படுவார் - வெளியான அதிர்ச்சி தகவல்
திடீரென ஒருநாள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலையில் சுத்தியலால் அடித்துக்கொல்லப்படுவார் என முன்னாள் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மூத்த உளவாளியான Daniel Hoffman, புடினுடைய ஆலோசகர்கள் உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதால், அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவரை அகற்றுவதற்காக இரகசிய திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்களை புடின் கண்டுபிடித்துக் கொல்வதற்கு முன், அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
திடீரென ஒருநாள் அது நடக்கும் எனவும், அப்போது புடின் இறந்திருப்பார் என்றும், யாரும் அவரிடம் சென்று, புடின், நீங்கள் பதவி விலகுவீர்களா என்று கேட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் கூறுகிறார்.

சுத்தியலால் தலையில் அடிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்
அவர் ஒன்றில் சுத்தியலால் தலையில் அடிக்கப்பட்டுக் கொல்லப்படுவார், அல்லது, நீண்ட கால வியாதியுடையவர்களுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்.
அவர்கள் புடினைத் தலையில் அடித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள் என்று Daniel Hoffman தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான மூன்று பேர், புடினுடைய பாதுகாப்புக் கவுன்சில் தலைவரான Nikolai Patrushev, ரஷ்ய பாதுகாப்பு ஏஜன்சியான FSBயின் தலைவரான Alexander Bortnikov மற்றும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu என பெயர்களையே வெளிப்படையாகக் கூறிவிட்டார் Hoffman.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan