ஒரு நிமிடம் போதும்! போரிஸ் ஜான்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்த புடின்
உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்னர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரஷ்ய அதிபர் புடின் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பி.பி.சி. ஆவண படமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போருக்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மேற்கு நாடுகள் போராடிய விதத்தினை காட்டும் பிபிசியின் புதிய தொடருக்காக கருத்து தெரிவித்த போது பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
புடின் அழைப்பினை ஏற்படுத்தி , 'போரிஸ், நான் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் ஒரு ஏவுகணை மூலம், அது ஒரு நிமிடம் எடுக்கும்' அல்லது அது போன்ற ஏதாவது என கூறி மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உக்ரைன் மக்களின் துன்பம் நீண்ட காலமாக உள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, உக்ரைன் வெற்றி பெறுவது எனவும்,உக்ரைனுக்கான பிரித்தானியாவின் அரசாங்க கொள்ளை இரண்டையும் முழுமையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
