இராஜதந்திர விரிவாக்க நகர்வு! இந்தியாவிற்கு புடின் விசேட விஜயம்
இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக அந்நாட்டு(ரஷ்ய) வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த செர்ஜி லாவ்ரோவ்,
"இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3 ஆவது முறையாக பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரஷ்யாவிற்கு தான் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார்.
விளாடிமிர் புடின்
அவ்வகையில் இந்த முறை விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
மோடியின் அழைப்பை புடின் ஏற்றுக்கொண்டார். புடின் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
பிரதமர் மோடி கடந்தாண்டு ரஷ்யாவிற்கு வருகைத்தந்து புடினை சந்தித்து பேசினார்.
அப்போது இந்தியாவிற்கு வருமாறு மோடி அழைப்பு விடுத்திருந்தார்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
