உக்ரைன் மற்றும் ஐரோப்பாவை கடுமையாக எச்சரிக்கும் புடின்
உக்ரைன் விவகாரத்தில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாரில்லை எனவும் நிலங்களை பலவந்தமாக கைப்பற்ற தயங்கப் போவதில்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் நிலப்பகுதி விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை என புடின் தெளிவுபடுத்தினார்.
ரஷ்ய பாதுகாப்பு
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய போது புடின் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனின் ஐரோப்பிய கூட்டாளிகளை கடுமையாக விமர்சித்ததுடன், தேவையானால் பலவந்தமாகவே நிலப்பகுதிகளை கைப்பற்றுவோம் என எச்சரித்துள்ளார்.

“மோதலின் மூல காரணங்களை நீக்குவதற்கான தீர்வை ராஜதந்திர முறையில் அணுகுவதற்கு விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்நாடு மற்றும் அதன் வெளிநாட்டு ஆதரவாளர்கள் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு மறுத்தால், ரஷ்யா தனது ‘வரலாற்று நிலங்களை’ இராணுவ வழியிலேயே விடுவிக்கும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் முதலிடத்தில் எலான் மஸ்க்! புதிய உச்சம் தொட்ட அவரின் சொத்துமதிப்பு - முதல் நபர் என்ற சாதனை
ட்ரம்ப் நம்பிக்கை
உக்ரைன் ஒப்படைக்க வேண்டுமென ரஷ்யா கோரும் பகுதிகளே, தொடரும் அமைதி பேச்சுவார்த்தைகளின் முக்கிய முட்டுக்கட்டையாக உள்ளன.
சமாதான ஒப்பந்தம் சாத்தியமென்று ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டாலும், உக்ரைனின் ஐரோப்பிய கூட்டாளிகள் கடுமையான பாதுகாப்பு உத்தரவாதங்களை வலியுறுத்தி வருகின்றனர் என புடின் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஆனால் தற்போதைய ஐரோப்பிய அரசியல் தலைமையுடன் அர்த்தமுள்ள அமைதி பேச்சு சாத்தியமில்லை என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.