6 கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்த இஸ்ரேல்
ஜோர்தானில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கான எல்லையைக் கடக்க முயன்ற ஆறு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 24 பேர் கொண்ட குழுவுக்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளது.
எனினும்TCMV பயங்கரவாதக் குழுவாக இஸ்ரேலால் தடைசெய்யப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பான Islamic Relief Worldwide உடன் தொடர்பு கொண்டிருந்ததால், குறித்த 30 பேர் கொண்ட குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கனடாவிற்கான இஸ்ரேலிய தூதர் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டு மறுப்பு
இந்தநிலையில், இஸ்லாமிய நிவாரணத்தின் கனேடிய இணை அமைப்பு , இஸ்ரேலின், இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

மேற்கு கரைப்பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
களத்தில் உள்ள நிலைமைகளைக் கவனிப்பதே தமது நோக்கமாக இருந்தது என்று குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற பயணத்தில் பயணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ,இஸ்ரேலினால் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிட்த்தக்கது.