அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த புடின்
ரஷ்யாவின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் அண்மைய நடவடிக்கை தீவிரமானது என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அந்த நகர்வு ரஷ்ய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் வலுவானதல்ல எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது புதன்கிழமை அமெரிக்கா அதிரடி நடவடிக்கை முன்னெடுத்தது.
மலிவு விலை
இதில் Rosneft ரஷ்ய அரசாங்க எண்ணெய் நிறுவனம், மற்றொன்று தனியாருக்கு சொந்தமான Lukoil. இந்த நிறுவனத்திடம் இருந்தே இந்தியாவும் சில ஐரோப்பிய நாடுகளும் மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றனர்.
ஜனாதிபதி பொறுப்புக்கு வந்ததன் பின்னர் ரஷ்யாவிற்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி புடின், ரஷ்யாவிற்கு எதிராக அவர்கள் தீவிரமாக இருப்பது அமெரிக்காவின் இந்த முடிவால் வெளிப்பட்டுள்ளது. சொன்னதை செய்த ட்ரம்ப். ரஷ்ய பொருளாதாரத்திற்கு அளித்த பெரும் நெருக்கடி சொன்னதை செய்த ட்ரம்ப்.
ரஷ்ய பொருளாதாரத்திற்கு அளித்த பெரும் நெருக்கடி அவை சில விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மை தான், ஆனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை உலுக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை என்றார். மட்டுமின்றி, இந்தத் தடைகள் ரஷ்யா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தாத ஒரு நட்பற்ற செயல் என்றும் அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



