பொது வெளியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் புடின்
ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய தகவல்கள் பரவி வந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புடின் பொது வெளியில் தோன்றியுள்ளார்.
ரஷ்ய அதிபர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
உடல்நிலை மோசமாகவுள்ளதாக தகவல்
மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்திருந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புடின் பொது வெளியில் தோன்றியுள்ளார்.
குண்டு வெடிப்பில் சேதம் அடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணி முடிவடைந்து திறக்கப்பட்ட நிலையில்,பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
