ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு புடின் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) அறிவித்துள்ளார்.
அதாவது ஈஸ்டர் பண்டிகையன்று மட்டும் ரஸ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தாது என்று தற்காலிக போர் நிறுத்தத்தை புடின் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம்
ஆனால் இந்த அறிவிப்புக்கு உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚡️ President Putin announces Easter ceasefire.
— MFA Russia 🇷🇺 (@mfa_russia) April 19, 2025
💬 The Russian Side announces an #EasterCeasefire from 06:00 pm today to 00:00 am Monday. This is done for humanitarian reasons
I hereby order all military operations ceased for this period. https://t.co/Vc6kLoi9qB pic.twitter.com/XS2L6umAPM
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி வலேரி ஜெராசிமோவிடம் போர் நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி "இன்று(19) மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை, ரஸ்ய தரப்பு ஈஸ்டர் போர் நிறுத்தத்தை அறிவிக்கிறது" என்று ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்
உக்ரைன் ரஸ்யாவின்(Russia) முன்மாதிரியைப் பின்பற்றும் என்று தான் நினைப்பதாகவும், போர் நிறுத்தத்தின் போது உக்ரைனின் நடவடிக்கைகள் தான் அந்நாடு அமைதி தீர்வை விரும்புகிறது என்பதை காட்டும் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ஆனால் உக்ரைன் போர் நிறுத்தத்தை மீறினால் அதைத் தடுக்க துருப்புக்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் புடின், இராணுவ தளபதி ஜெராசிமோவிடம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட பதிவில், "போர் நிறுத்தம் என்பது மனிதாபிமான நோக்கங்களுக்காக தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
