இந்தியாவின் அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தானிய கடற்படை பயிற்சி இரத்து
திருகோணமலையின்(Trincomalee) கடற்பரப்பில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையே, பயிற்சி ஒன்றை நடத்தும் திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர், புதுடில்லி கொழும்பில் இந்த விடயம் தொடர்பில் வெளியிட்ட அதிருப்தியை அடுத்தே, குறித்த பயிற்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படைகள்
இரண்டு நாடுகளின் கடற்படைகளும் அவற்றின் வழக்கமான தொடர்புகளுக்கு ஏற்ப, திருகோணமலையில் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தன.
எனினும், இந்தப் பயிற்சி குறித்த தனது அச்சங்களை இந்தியா இலங்கைத் தரப்புக்கு தெரிவித்த பின்னர், இந்தத் திட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு வருகைக்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இந்தக் கூட்டுப் பயிற்சி திட்டமிடப்பட்டிருந்தது.
பயிற்சி இரத்து
இந்தநிலையில் குறித்த பயிற்சி இரத்துச் செய்யப்பட்டமை குறித்து, இலங்கை அல்லது பாகிஸ்தானிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் கடற்படை சீனாவின் பி.எல்.ஏ கடற்படையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படும் நிலையில், பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் திருகோணமலைக்கு வருகை தருவது குறித்து புதுடில்லி கவலை கொள்ள காரணங்கள் உள்ளன என்று பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
