புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து எரிபொருள் மீட்பு
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் மலசல கூடத்தில் இருந்து எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தெரிவித்த முறைப்பாட்டினை
தொடர்ந்து நேற்று(30) இரவு புதுக்குடியிருப்பு பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது சுமார் 69 லீட்டர் எரிபொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மக்கள் குற்றச்சாட்டு
மக்கள் நீண்ட வரிசையில் வந்து காத்திருந்தும் மக்களுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் அண்மையில் பிரதேச செயலளாரின் வாகனத்தில் வந்து கான்களில் எரிபொருள் நிரப்ப்பபட்டு வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனையின் பின்னர், அலுவலக பயன்பாட்டிற்காகவும் தனது பயணத்திற்காவும் வைக்கப்பட்ட எரிபொருட்களே அவை என பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam