அரசியலுக்கு வரும் புஷ்பிகா டி சில்வா
தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருவதாக இலங்கையின் முன்னாள் திருமதி அழகு ராணி புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
உலக திருமதி அழகு ராணி போட்டியில் கலந்துக்கொள்ள தகுதி பெற்ற புஷ்பிகாவுக்கு ஆறாவது இடம் கிடைத்தது. இலங்கை திருமதி அழகு ராணி போட்டியில் கலந்துக்கொண்ட போது நியாயத்திற்காக குரல் கொடுத்த அனைவருக்கும், தெரிவாளர் குழு, தேசிய கண்காணிப்பு அதிகாரி உட்பட உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் எவரையும் பகையாளியாக கருதுவதில்லை. என்னை பகையாளியாக கருதியவர்களுக்கும் மன்னிப்பு வழங்கியுள்ளேன். பகையால் எதனையும் வெல்ல முடியாது.
கடந்த 8 ஆம் ததிகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை திருமதி அழகு ராணி பட்டத்தை நீக்க, இலங்கை ஏற்பாட்டுக்குழுவின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
தனது அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியாக அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் இதனடிப்படையில் புஷ்பிகா டி சில்வா, இலங்கை திருமதி அழகு ராணி பட்டத்தை தேசிய, சர்வதேச மற்றும் வேறு எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது என சந்திமால் ஜயசங்க அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் என புஷ்பிகா டி சில்வா தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



