சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ள யாழ். மைந்தன்
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Powerlifting) பளு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில், 120 கிலோ எடைப் பிரிவில், Dead Lift போட்டியில் தங்கப் பதக்கத்தையும், Bench Press போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், Squats போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சற்குணராசா புசாந்தன், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் பழைய மாணவனாவர்.
பளு தூக்கல் போட்டி
இவர், தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் புதிய சாதனைகளை தன்வசப்படுத்தியவராவார்.
தேசிய ரீதியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கியமையே இவரின் சிறந்த சாதனையாகும்.

| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri