நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய நீர்பாசன குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கைகளில் தற்போது அறுவடைகள் நடைபெற்று வருகின்றது.
இதன் காரணமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உடனடியாக நடவடிக்கைய எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் அதிகார சபையினர் வலியுறுத்தியுள்ளனர்.
சிரமத்தில் விவசாயிகள்
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் குறைந்த விலையில் தமது நெல்லை கொள்வனவு செய்யும் நிலை காணப்படுவதனால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையேற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதனால் அரசாங்கமே நிர்ணயித்த விலையில் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


