ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனவு
ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இலங்கை, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் ஈரானிய பிரதமர் ஹொசைன் அமீர் - அப்துல்லாஹியனுடன் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 77 ஆவது கூட்டத்தொடரின் போது கலந்துரையாடியதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு விவகாரங்கள்
சுமுகமான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து தாம் இருவரும் விவாதித்ததாக சபரி கூறியுள்ளார்.
இந்த நிலையில் மசகு எண்ணெய் இறக்குமதிக்கான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கு இலங்கையின் அமைச்சகத்துடன் தொடர்ந்து பேசி நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பில் உள்ள தனது நாட்டு தூதருக்கு அறிவுறுத்துவதாக ஈரான் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் ஈரானிடம் இருந்து எரிபொருளை
பெறும் போது, இடைத்தரகர்கள் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம் என்று சப்ரி
மேலும் கூறியுள்ளார்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
