புங்குடுதீவு அகிலன் படுகொலை: மற்றுமொரு சந்தேக நபர் கைது
புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21.2.2026) ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பதாக குறித்த கொலைக் கும்பலின் பிரதான சந்தேக நபரான அனலைதீவை சேர்ந்த நபர் கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது
அந்த நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் மற்றுமொரு சந்தேக நபர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan