கொழும்பில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கொழும்பு, கல்கிஸை, சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று(20.2.2026) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 44 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணை
கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.